பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் கடிதம் எழுதியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கின. இந்நிலையில் கூடுதல் மனிதாபிமான உதவிகளை வழங்க கோரி இந்திய பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், உக்ரைனுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி வழங்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து உக்ரைன் மந்திரி எமின் கூறுகையில், இந்தியாவும் கடினமான அண்டை நாடுகளை கொண்டுள்ளது. எப்போது எல்லாம் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறதோ, அதைத் தடுக்கவில்லை என்றால் அதன் விளைவுகள் பெரியதாகி விடும். உக்ரைனில் பயின்ற வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை அவர்கள் வசிக்கும் நாட்டில் ஒருங்கிணைந்த மாநில தகுதி தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று கூறினார்.