சாட் ஜிபிடியுடன் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் - லேக்சி

February 17, 2023

இந்தியாவைச் சேர்ந்த வெலாசிட்டி என்ற தொழில்நுட்ப நிதி நிறுவனம், லேக்சி என்ற பெயரில் புதிய சாட்பாட் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவின் முதல் சாட் ஜிபிடி உடன் ஒருங்கிணைந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் கருவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி இணைய வர்த்தகத்தில் நுழைவோருக்கு உதவிகள் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இன்னும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலாசிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிரூப் மதேக்கர் இந்த தகவல்களை தெரிவித்தார். லேக்சி […]

இந்தியாவைச் சேர்ந்த வெலாசிட்டி என்ற தொழில்நுட்ப நிதி நிறுவனம், லேக்சி என்ற பெயரில் புதிய சாட்பாட் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவின் முதல் சாட் ஜிபிடி உடன் ஒருங்கிணைந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் கருவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி இணைய வர்த்தகத்தில் நுழைவோருக்கு உதவிகள் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இன்னும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலாசிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிரூப் மதேக்கர் இந்த தகவல்களை தெரிவித்தார்.

லேக்சி சாட்பாட் கருவி இன்சைட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்சைட்டில், சாட் ஜிபிடி தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்சைட்டில் உள்ள 3000க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் வர்த்தக மேம்பாட்டு கருவியாக லேக்சி மாற உள்ளது. இது வாட்ஸ் அப் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உரையாடல் முறையில் வர்த்தகத் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu