ஐபிஓ மூலம் 15000 கோடி திரட்ட எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் திட்டம்

December 9, 2024

தென் கொரியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா, இந்திய பங்குச் சந்தையில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக இருக்கக் கூடிய வகையில், ரூ.15,237 கோடி மதிப்புள்ள ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளது. எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ தொடர்பான ஆவணங்கள் செபியிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்த ஐபிஓ முழுக்க எல்ஜியின் தாய் நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்யும் வகையில் இருக்கும். மோர்கன் ஸ்டான்லி, ஜேபி […]

தென் கொரியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா, இந்திய பங்குச் சந்தையில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக இருக்கக் கூடிய வகையில், ரூ.15,237 கோடி மதிப்புள்ள ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளது.

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓ தொடர்பான ஆவணங்கள் செபியிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்த ஐபிஓ முழுக்க எல்ஜியின் தாய் நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்யும் வகையில் இருக்கும். மோர்கன் ஸ்டான்லி, ஜேபி மோர்கன், ஆக்சிஸ் கேபிடல், சிட்டி மற்றும் போஃபா செக்யூரிட்டீஸ் ஆகிய முன்னணி முதலீட்டு வங்கிகள் இந்த ஐபிஓவுக்கு ஏற்பாடு செய்கின்றன. ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் மற்றும் சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ் ஆகிய சட்ட நிறுவனங்கள் எல்ஜிக்கு சட்ட ஆலோசனை வழங்குகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu