கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி லிபியாவில் அணை உடைப்பு ஏற்பட்டது. சுனாமியை போன்ற பாதிப்பை இது ஏற்படுத்தி உள்ளது. டெர்னா நகரில் மட்டுமே 11000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த பேரிடர் காரணமாக கிட்டத்தட்ட 43000 பேர் புலம்பெயர்ந்து உள்ளதாக சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக லிபியாவில் கனமழை பெய்து வந்தது. அப்போது டெர்னா நகரில் உள்ள பழமை வாய்ந்த அணை உடைந்து மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டது. அணை உடைப்பால் பல்லாயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். தற்போது வரை, ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பேரிடரை தொடர்ந்த நாட்களில், கிட்டத்தட்ட 43000 பேர் புலம்பெயர்ந்துள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.