லிபியாவில் 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

September 14, 2023

லிபியாவில், டேனியல் புயல் ஏற்பட்டபோது, வாடி டெர்னா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப்பெரிய சத்தத்துடன் உடைந்தது. இதனால், அணையில் இருந்த மொத்த நீரும் டெர்னா நகரை அடித்துச் சென்று மத்திய தரை கடலுக்குள் சென்றது. இந்த கோர நிகழ்வில், 20000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6000 ஐ தாண்டி உள்ளது. சுமார் 20,000 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய தரை கடலில் இருந்து, தொடர்ந்து சடலங்கள் கரை […]

லிபியாவில், டேனியல் புயல் ஏற்பட்டபோது, வாடி டெர்னா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை மிகப்பெரிய சத்தத்துடன் உடைந்தது. இதனால், அணையில் இருந்த மொத்த நீரும் டெர்னா நகரை அடித்துச் சென்று மத்திய தரை கடலுக்குள் சென்றது. இந்த கோர நிகழ்வில், 20000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தற்போதைய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6000 ஐ தாண்டி உள்ளது. சுமார் 20,000 பேர் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய தரை கடலில் இருந்து, தொடர்ந்து சடலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன. எனவே, மாயமான அத்தனை பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. டெர்னா நகரின் வீடுகள், வாகனங்கள் அனைத்துமே கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலை இணைப்புகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிபியா நாட்டில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுத குழுக்கள் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. அதனால், தொடர்ந்து உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, நாட்டின் கட்டமைப்புகளை சரிவர பராமரிக்கவில்லை என்றும், அதனாலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu