பாலசோர் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு எல்ஐசி நிறுவனம் தளா்வுகளை அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் ஜூன் 2-ம் தேதி ஏற்பட்ட ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும், உரிமங்களை விரைந்து வழங்கவும் எல்ஐசி நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இந்நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா திட்ட பயனாளிகளுக்கும் உரிமை தொகை கோருவதில் பல்வேறு தளர்வுகளை எல்ஐசி தலைவர் அறிவித்துள்ளார். இறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம், காவல்துறை அல்லது மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள உயிரிழந்தவர்களின் விவரங்கள் இறப்புச் சான்றிதழாகக் கருதப்படும்.
உாிமைதாரர்கள் மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள கிளை/கோட்ட வாடிக்கையாளர் சேவை மையங்களை அணுகலாம். அத்துடன் 022-68276827 என்ற எண்ணிலும் அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.














