எல்.ஐ.சி., தனது டிஜிட்டல் பயணத்தை வேகப்படுத்த இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் மூலம், எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும். இன்ஃபோசிஸ், எல்.ஐ.சி.க்கு ஒரு நவீன டிஜிட்டல் தளத்தை உருவாக்கித் தரும். இந்த தளம், வாடிக்கையாளர்களின் தேவைகளை முன் கூட்டியே அறிந்து, அவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்கும் வகையில் செயல்படும். மேலும், இந்த தளம் அனைத்து வகையான சாதனங்களிலும் எளிதாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்படும்.
இன்ஃபோசிஸ் நிறுவனம், வங்கி, நிதி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் டிஜிட்டல் மாற்ற திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த நிலையில், எல் ஐ சி உடனான கூட்டு முயற்சியின் மூலம், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த சேவைகளை வழங்க முடியும்.