எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தில் அதிக முதலீடுகள் செய்துள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதிலிருந்து, அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. அதன் எதிரொலியாக, எல்ஐசி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கு முன்னதாக, எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 582 ரூபாய்க்கு வரலாற்று குறைவான பதிவை பதிவு செய்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தக நாள் இறுதியில், எல்ஐசி பங்குகள் 1% க்கும் மேலாக சரிந்து, ஒரு பங்கு 585 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதன் மூலம், கிட்டத்தட்ட அதன் வரலாற்று சரிவை எல்ஐசி எதிர்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி 9.1% பங்குகளை கொண்டுள்ளது. மேலும், அதானி குழுமத்தை சேர்ந்த 6 பிற நிறுவனங்களில், கிட்டத்தட்ட 1.25% முதல் 6.5% வரை பங்குகளை கொண்டுள்ளது. எனவே, கடந்த ஒரு மாதத்தில், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சரிய சரிய, எல்ஐசி பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 17% சரிவை பதிவு செய்துள்ளது.