எல்ஐசி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபத்தில் 49% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், எல் ஐ சி நிறுவனத்தின் நிகர லாபம் 9444 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்ஐசிக்கு ப்ரீமியம் மூலம் கிடைக்கும் வருவாய் 117017 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, எல் ஐ சி நிறுவனத்தின் பங்குகள் 6% அளவுக்கும் கூடுதலாக உயர்ந்தன. இதன் விளைவாக, எல்ஐசி யின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 6.99 லட்சம் கோடி அளவில் உயர்ந்தது. மேலும், இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில், ஐந்தாம் இடத்துக்கு எல்ஐசி முன்னேறி உள்ளது.