806 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி நிலுவை - எல்ஐசிக்கு நோட்டீஸ்

January 2, 2024

எல்ஐசி நிறுவனம் கிட்டத்தட்ட 806 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், எல்ஐசி நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் மாநில வரி இணை ஆணையர், எல்ஐசிக்கு 404 கோடி அபராதம் விதித்துள்ளார். கடந்த 2017 -18 ஆம் நிதி ஆண்டில் இந்த முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அபராதம் 404 கோடியுடன், 365.02 கோடி அளவில் ஜிஎஸ்டி வரி நிலுவையை எல் ஐ சி […]

எல்ஐசி நிறுவனம் கிட்டத்தட்ட 806 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், எல்ஐசி நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் மாநில வரி இணை ஆணையர், எல்ஐசிக்கு 404 கோடி அபராதம் விதித்துள்ளார். கடந்த 2017 -18 ஆம் நிதி ஆண்டில் இந்த முறைகேடு நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அபராதம் 404 கோடியுடன், 365.02 கோடி அளவில் ஜிஎஸ்டி வரி நிலுவையை எல் ஐ சி நிறுவனம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 806.4 கோடி ரூபாய் தொகையை எல்ஐசி செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எல்ஐசி மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu