கர்நாடகாவைச் சேர்ந்த டிலைட்ஃபுல் கோர்மெட் நிறுவனம், லிசியஸ் ஆன்லைன் இறைச்சி விற்பனை சேவையை நடத்தி வருகிறது. 2015ல் தொடங்கிய இந்நிறுவனம், 14 நகரங்களில் விரிவடைந்து, வீட்டு வாசலில் புதிய இறைச்சியை வழங்குகிறது. சர்வதேச முதலீட்டாளராக டெமாசெக் ஹோல்டிங் இங்கு முதலீடு செய்துள்ளது. 2026ல் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், லாப ஈட்டத்தை துரிதப்படுத்தி வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்துக்குள் EBITDA லாபத்தை எட்டுவதே இலக்காக இருப்பதாகவும் தலைமை செயல் அதிகாரி விவேக் குப்தா கூறினார்.
2023ல் லிசியஸ் நிறுவனம் 150 கோடி டாலர் மதிப்பீட்டில் இருந்தது. தற்போது 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்காவுக்குப் பிறகு மிகப்பெரிய ஐபிஓ சந்தையாக உள்ளது. 2024ல் இந்திய பங்குச் சந்தை 20 பில்லியன் டாலருக்கு மேலான நிதியை ஐபிஓ வாயிலாக திரட்டியது. இந்த நிலையில், 2025 முதல் காலாண்டில் லிசியஸ் ஐபிஓ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.