எல் ஐ சி நிறுவனத்தின் 2ம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபம் பாதி அளவாக குறைந்துள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், எல்ஐசி நிறுவனத்தின் மொத்த வருவாய் 201587 கோடி ரூபாய் ஆகும். இது 18% சரிவாகும். எனவே, அதன் லாபம் 7925 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் 15952 கோடி மதிப்பில் லாபம் பதிவாகி இருந்தது. எனவே, நிறுவனத்தின் லாபத்தில் 50% க்கும் மேலாக சரிவு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரீமியம் தொகை மூலமாக வசூலிக்கப்படும் வருவாயில் சரிவு ஏற்பட்டதால், இந்த நிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தொகைகளை துறைக்குள்ளாக மாற்றம் செய்ததாகவும், அதனால் கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டு நிலவரத்தை ஒப்பிட முடியாது எனவும், நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.