பூமியை போலவே வேற்று கிரகங்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதன் கிரக உப்பு பாறைகளுக்கு அடியில் உயிர் வாழ்வதற்கான சூழல் இருக்கலாம் என சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகத்தில், கடுமையான வெப்பம் நிலவுகிறது. அதேவேளையில், அங்கு உப்பு பாறைகள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, முன்பொரு காலத்தில் புதன் கிரகத்திலும் பூமியை போலவே உயிர் வாழும் சூழல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இந்த உப்பு பாறைகளுக்கு அடியில் நுண் உயிர்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது தொடர்பான தீவிர ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.