சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள் மெர்குரி எனப்படும் புதன் கிரகம் ஆகும். இந்த கிரகத்தின் அழகிய புகைப்படம் ஒன்றை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வெளியான முதலே, சமூக ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.புதன் கிரகம், சூரியனுக்கு மிக அருகில் இருந்தாலும், சூரிய குடும்பத்தில் உள்ள வெப்பமான கிரகமாக இது இல்லை. அதே வேளையில், சூரிய குடும்பத்தின் வேகமாக சுழலும் கிரகமாக இது அறியப்படுகிறது. மெர்குரி கிரகத்தில் ஒரு வருடம் என்பது வெறும் 88 புவி நாட்கள் தான். இந்த விவரங்களை, நாசா புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ளது. நாசா பகிர்ந்து உள்ள புகைப்படத்தில், மெர்குரி கிரகம் நீல நிறத்தில் ஒளிர்கிறது. வைரத்தைப் போல இது மின்னுவதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும், மெர்குரி கிரகத்தின் மேற்பகுதியில் கிரேட்டர்கள் உள்ளது அந்த புகைப்படத்தில் தெளிவாக காணப்படுகிறது. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மெசஞ்சர் விண்கலம் மெர்குரியை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது. இந்த விண்கலம் எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














