லிங்க்டுஇன் நிறுவனத்தில் பணி நீக்கம்

February 14, 2023

மைக்ரோசாப்ட்டால் நிர்வகிக்கப்படும் லிங்க்டுஇன் நிறுவனம், அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட துறையில், சமூக வலைத்தள அடிப்படையில் லிங்க்டுஇன் நிறுவனம் செயலாற்றி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் 617 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கிளை நிறுவனங்கள் வரிசையாக பணி நீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹார்டுவேர் பிரிவுகளான ஹோலோலென்ஸ், சர்பேஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றில் பணி நீக்கங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், […]

மைக்ரோசாப்ட்டால் நிர்வகிக்கப்படும் லிங்க்டுஇன் நிறுவனம், அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட துறையில், சமூக வலைத்தள அடிப்படையில் லிங்க்டுஇன் நிறுவனம் செயலாற்றி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் 617 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பல்வேறு கிளை நிறுவனங்கள் வரிசையாக பணி நீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹார்டுவேர் பிரிவுகளான ஹோலோலென்ஸ், சர்பேஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றில் பணி நீக்கங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், லிங்க்டுஇன் நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே, தொழில்நுட்ப துறையில் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் பணி நீக்கத்தை அறிவித்து வருகின்றன. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரை 344 நிறுவனங்களைச் சேர்ந்த 103767 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu