மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வேலைவாய்ப்பு சார்ந்த சமூக ஊடகத் தளமான லிங்க்டுஇன், புதிய சுற்றுப் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது.
லிங்க்ட் இன் நிறுவனம், இந்த ஆண்டு ஏற்கனவே ஒருமுறை பணி நீக்கத்தை அறிவித்தது. லிங்க்ட் இன் நிறுவனத்தின் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையாக அது சொல்லப்பட்டது. தற்போது, இரண்டாம் சுற்று பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. இந்த முறை 668 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. இது, மொத்த லிங்க்டுஇன் ஊழியர் எண்ணிக்கையில் 3% ஆகும்.