லிங்க்ட்இன் நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த 25 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டிசிஎஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்துக்கு அடுத்ததாக, அக்சென்சர் மற்றும் காக்னிசென்ட் ஆகிய நிறுவனங்கள் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்துள்ளன.
லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள பட்டியலில் நிதி துறையை சார்ந்த மார்கன் ஸ்டான்லி, ஜேபி மார்கன் சேஸ் ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. நடுத்தர அளவிலான நிறுவனங்களை பொறுத்தவரை, லென்ட்ரா, மேக் மை ட்ரிப், நைக்கா, ட்ரீம் லெவன் ஆகிய நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. மேலும், டெலாய்ட், பெப்சிகோ, ஹெச் சி எல், அமேசான், ஐ சி ஐ சி ஐ வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ், மாஸ்டர் கார்டு, இன்டெல் ஆகிய நிறுவனங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.