தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இலக்கியமாமணி விருது அறிவிப்பு

January 25, 2024

ஆண்டுதோறும் மரபுத் தமிழ், ஆய்வு தமிழ், படைப்புத்தமிழ் ஆகிய வகைகளில் மூன்று அறிஞர்களுக்கு உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக ஆண்டுதோறும் பல்வேறு படைப்புகளை கொண்டு சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கு தொண்டாற்றும் அறிஞர் பெருமக்களுக்கு பல்வேறு சிறப்பு விருதுகளை வழங்கி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான மரபுத்தமிழ், ஆய்வு தமிழ், படைப்பு தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று […]

ஆண்டுதோறும் மரபுத் தமிழ், ஆய்வு தமிழ், படைப்புத்தமிழ் ஆகிய வகைகளில் மூன்று அறிஞர்களுக்கு உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக ஆண்டுதோறும் பல்வேறு படைப்புகளை கொண்டு சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கு தொண்டாற்றும் அறிஞர் பெருமக்களுக்கு பல்வேறு சிறப்பு விருதுகளை வழங்கி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றது. அந்த வகையில் 2023 ஆம்
ஆண்டிற்கான மரபுத்தமிழ், ஆய்வு தமிழ், படைப்பு தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதி உரை மற்றும் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவார்கள். தற்போது 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளுக்கு கடலூர் மாவட்ட சேர்ந்த மாணிக்கவாசகர் (மரபுத் தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வு தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கிய நடராசன் என்ற ச. நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu