பால்டிக் நாடான லிதுவேனியாவில் ஊழல் குற்றச்சாட்டின் பின்னணியில் பிரதமர் ஜின்டாடாஸ் பலுக்காஸ் தனது பதவியை விலகினார் என்று அதிபர் கீதானாஸ் நவுசேடா அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலுக்காஸ் பிரதமராக பதவி ஏற்றார். சமீபத்தில் அவரது மைத்துனியின் நிறுவனத்துடன் வணிக பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா கோரிக்கை வைத்தன. இதையடுத்து பலுக்காஸ், முறையற்ற வணிக உறவுகள் மற்றும் கடந்த கால தவறுகளுக்கான பொறுப்பை ஏற்று பதவி விலகுவதாக அறிவித்தார். புதிய அரசாங்கம் அமைக்கும் வரை இடைக்கால நிர்வாகம் செயல்படும் என லிதுவேனியா அரசு தெரிவித்துள்ளது.