இன்று பிரிட்டனின் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்பு

September 6, 2022

பிரிட்டனின் பிரதம௫க்கான போட்டியில் ரிஷியை லிஸ் டிரஸ் தோற்கடித்தார். இந்த வெற்றிக்கு பின் அவர் பால்மோரல் அரண்மனையில் ராணி எலிசபெத்தைச் சந்தித்து பிரதமராக பதவியேற்க உள்ளார். 47 வயதான லிஸ் டிரஸ் பதவியேற்ற உடனேயே நாட்டு மக்களை எரிசக்தி செலவில் இருந்து பாதுகாக்க ஒரு உடனடி திட்டத்தை வகுக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார். ஆகவே புதிய பிரதமர் ராணி எலிசபெத்திடம், நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் , புதிய அமைச்சர்கள் குழுவை நியமிப்பது குறித்தும் கலந்தாலோசிக்க உள்ளார். மேலும் […]

பிரிட்டனின் பிரதம௫க்கான போட்டியில் ரிஷியை லிஸ் டிரஸ் தோற்கடித்தார். இந்த வெற்றிக்கு பின் அவர் பால்மோரல் அரண்மனையில் ராணி எலிசபெத்தைச் சந்தித்து பிரதமராக பதவியேற்க உள்ளார்.

47 வயதான லிஸ் டிரஸ் பதவியேற்ற உடனேயே நாட்டு மக்களை எரிசக்தி செலவில் இருந்து பாதுகாக்க ஒரு உடனடி திட்டத்தை வகுக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.
ஆகவே புதிய பிரதமர் ராணி எலிசபெத்திடம், நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் , புதிய அமைச்சர்கள் குழுவை நியமிப்பது குறித்தும் கலந்தாலோசிக்க உள்ளார். மேலும் அவரது பிளவுபட்ட கட்சியை ஒன்றாக இணைப்பது பற்றியும் ஆலோசிக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பேசிய லிஸ் டிரஸ் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி ௯றினார். பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் திறனை வெளிக்கொணரவும் தான் துணிச்சலான நடவடிக்கை எடுப்பதாக ௯றினார். இதற்கிடையில் ஜான்சன் ஸ்காட்லாந்திற்குச் சென்று ராணி எலிசபெத்தை அவரது பால்மோரல் இல்லத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என செய்தி வெளியாகியுள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu