பிரதம மந்திரியின் கடன் திட்டத்தின் கீழ் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாய் 3749 கோடி கடன் தொகையை வழங்கினார். கோவை கொடிசியாவில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம், யோஜனா திட்டம், ஜந்தன் யோஜனா திட்டம்,பயிர் காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களுக்காக கடன் தொகை வழங்கப்பட்டது. இது பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், சுயதொழில் செய்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சுமார் 3000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட முன்னோடி வங்கி, கனரா வங்கி, மாநில வங்கிகள் குழுமம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகள் கொடிசியா வளாகத்தில் வளாகத்தில் ஏற்பாடு செய்தனர். இதில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாய் 3749 கோடி ரூபாய் கடன் திட்டத்தை மத்திய மந்திரியின் கடன் திட்டத்தின் கீழ் வழங்கினார்.














