வாட்ஸ்அப் செயலியில், சாட்களை லாக் செய்யும் ‘லாக் சாட்’ அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வாட்ஸ்அப் மேம்பாடுகள் குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் Wabetainfo தளத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் படி, தனிப்பட்ட ஒரு நபருடனான சாட்டை ‘லாக்’ செய்ய முடியும். உதாரணமாக, ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கைபேசியை இரவலாக பெற்று உபயோகிக்கும் பொழுது, பயனரின் அனுமதி இல்லாமல், சாட் செய்திகளை வாசிக்க முடியும். அதுவே, லாக் செய்யும் பட்சத்தில், செய்திகள் கசிவது முற்றிலும் தவிர்க்கப்படும். அதேபோன்று, லாக் செய்யப்பட்ட நபரின் சாட்டில் அனுப்பப்பட்ட ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கோப்புகள் போன்றவற்றை வேறு யாரும் பார்க்க இயலாது. எனவே, இதன் மூலம், பயனரின் பிரைவசி 100% உறுதி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.