2030 க்குள் தளவாடங்களுக்கான செலவுகள் 8-9% குறைக்கப்படும் - அனுராக் ஜெயின்

September 20, 2022

வர்த்தகத் துறையில் தளவாடங்களுக்கு (Logistics) ஆகும் செலவு பல மடங்காக உள்ளது. அந்த வகையில், அதனைக் கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள், 8 முதல் 9 சதவீதம் வரை தளவாடச் செலவுகளைக் குறைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) செயலாளர் அனுராக் ஜெயின் அறிவித்துள்ளார். அவர், “தற்போதைய நிலையில், மொத்த ஜிடிபியில் 13 முதல் 14 சதவீதம் தளவாடத்திற்காகச் செலவிடப்படுகிறது. […]

வர்த்தகத் துறையில் தளவாடங்களுக்கு (Logistics) ஆகும் செலவு பல மடங்காக உள்ளது. அந்த வகையில், அதனைக் கட்டுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள், 8 முதல் 9 சதவீதம் வரை தளவாடச் செலவுகளைக் குறைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) செயலாளர் அனுராக் ஜெயின் அறிவித்துள்ளார். அவர், “தற்போதைய நிலையில், மொத்த ஜிடிபியில் 13 முதல் 14 சதவீதம் தளவாடத்திற்காகச் செலவிடப்படுகிறது. உலக அளவில் இது 8 முதல் 9 சதவீதமாகும். ஆனால், அதை விடவும் கூடுதல் முன்னேற்றத்தை நாம் அடைய முடியும். எனவே, வரும் 2030 ம் ஆண்டுக்குள், தளவாடச் செலவுகளை 5-6% குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடியின் ‘தேசிய தளவாடங்கள் கொள்கை’ (National Logistics Policy), வேகமான டெலிவரி, போக்குவரத்து சவால்களுக்கான தீர்வுகள், உற்பத்தியாளர்களுக்கு காலவிரயம் மற்றும் பணவிரயம் போன்றவற்றை குறைத்தல் மற்றும் வேளாண் பொருட்கள் வீணாவதைத் தடுத்தல் போன்ற அம்சங்களை முதன்மையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பகுதியாக, நாட்டில் 196 கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, துறைமுக மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலக்கரி, எக்கு, உணவுப் பொருட்கள் போன்றவற்றை முறையாக அடையாளம் கண்டு தளவாடப்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு அமிர்தசரஸில் இருந்து கௌஹாத்தி வரை 95 கிலோ மீட்டர் ஒற்றை ரயில் பாதை உள்ளது. இதனை இரட்டைப் பாதையாக கோரக்பூர் முதல் வால்மீகி நகர் வரை செயல்படுத்தினால், ஒரு நாளைக்கு 15 ரேக்குகள் திறன் அதிகரிக்கும். இவ்வாறு தளவாடச் செலவுகளை பெருமளவு குறைக்க முடியும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu