மக்களவைத் தேர்தல் - 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடக்கம்

பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்கு பதிவு இன்று அதிகாலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், கடந்த மே 7 ஆம் தேதி 93 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், மே 13ஆம் […]

பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்கு பதிவு இன்று அதிகாலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், கடந்த மே 7 ஆம் தேதி 93 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவும் வெற்றிகரமாக நடைபெற்றது.அதன்படி இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில் ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரை 23 மாநிலங்களில் நான்கு கட்டங்களாக 379 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெற உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu