மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக, ஆளும் பாஜகவுக்கு எதிராக, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய், இன்று காலை 9:20 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஐந்தாம் நாளாகும். இன்னும் 13 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள […]

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக, ஆளும் பாஜகவுக்கு எதிராக, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய், இன்று காலை 9:20 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஐந்தாம் நாளாகும். இன்னும் 13 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதன்படி, நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் கேள்விகளை எழுப்பி உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர், “மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமரை நாடாளுமன்றத்தில் பேச வைக்க எங்களுக்கு வேறு வழியில்லை. நம்பிக்கை இல்லா தீர்மானம் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu