கர்நாடகாவில் உள்ள 51 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வருமானத்துக்கு அதிக அளவுக்கு அதிகமாக பணம் சேர்த்த அதிகாரிகள் வீடுகள், மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் முன்பு கடந்த சில நாட்களாக லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், பணம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன இந்நிலையில் மீண்டும் இன்று காலை லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடகாவில் 51 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இச்சோதனையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனை முடிந்து அதிகாரிகள் பட்டியல் மற்றும் கைப்பற்ற பொருட்களின் மதிப்பு ஆகியவை குறித்து அறிவிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.