புயல் வெள்ளத்தின் காரணமாக 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மிச்சங் புயலால் கடந்த இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 65 ஆயிரம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கேஸ் சிலிண்டர்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், நாமக்கல்லில் இருந்து முட்டைகள், கறிக்கோழிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 65 ஆயிரம் லாரிகளில் 35 ஆயிரம் லாரிகள் ஓட தொடங்கியுள்ளன. மேலும் இதுவரை 25 ஆயிரம் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.