சென்னை மெட்ரோவில் "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" திறப்பு

September 20, 2025

பயணிகள் தவறவிட்ட பொருட்களை பெற சென்ட்ரல் மெட்ரோவில் சிறப்பு அலுவலகம் தொடங்கப்பட்டது. சென்னையில் மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டால், அவற்றை இப்போது நேரடியாக சென்ட்ரல் மெட்ரோவில் புதிதாக தொடங்கப்பட்ட "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலம் பெறலாம். இதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் திறந்து வைத்தார். இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக இழந்த பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு முயற்சிகளின் மூலம் 74% […]

பயணிகள் தவறவிட்ட பொருட்களை பெற சென்ட்ரல் மெட்ரோவில் சிறப்பு அலுவலகம் தொடங்கப்பட்டது.

சென்னையில் மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டால், அவற்றை இப்போது நேரடியாக சென்ட்ரல் மெட்ரோவில் புதிதாக தொடங்கப்பட்ட "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலம் பெறலாம். இதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் திறந்து வைத்தார். இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக இழந்த பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு முயற்சிகளின் மூலம் 74% இழந்த பொருட்கள் உரியவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பொருட்கள் தொடர்பான தகவல்களை www.chennaimetrorail.org/lost-and-found-enquiry இணையதளத்தில் அறியலாம் அல்லது LFO@cmrl.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம். இந்த முயற்சி பயணிகள் வசதியை மேம்படுத்தி, தடையற்ற அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu