பயணிகள் தவறவிட்ட பொருட்களை பெற சென்ட்ரல் மெட்ரோவில் சிறப்பு அலுவலகம் தொடங்கப்பட்டது.
சென்னையில் மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டால், அவற்றை இப்போது நேரடியாக சென்ட்ரல் மெட்ரோவில் புதிதாக தொடங்கப்பட்ட "இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்" (Lost & Found Office) மூலம் பெறலாம். இதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல் திறந்து வைத்தார். இதுவரை, தனித்தனி மெட்ரோ நிலையங்கள் வாயிலாக இழந்த பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு முயற்சிகளின் மூலம் 74% இழந்த பொருட்கள் உரியவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களின் இழந்த பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், பொருட்கள் தொடர்பான தகவல்களை www.chennaimetrorail.org/lost-and-found-enquiry இணையதளத்தில் அறியலாம் அல்லது LFO@cmrl.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம். இந்த முயற்சி பயணிகள் வசதியை மேம்படுத்தி, தடையற்ற அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.