அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் பெர்னாட் அர்னால்ட்

April 26, 2023

உலகின் முதல் பணக்காரரான பெர்னாட் அர்னால்ட், தனது லூயி ஊட்டன் நிறுவனத்தை, தனக்குப் பிறகு தலைமை ஏற்று நடத்த, தொழில் வாரிசை தேர்வு செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. முதுமை பருவத்தில் இருக்கும் பெர்னாட் அர்னால்டுக்கு 5 புதல்வர்கள் உள்ளனர். லூயி ஊட்டன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், அவர் புதல்வர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மாதம் ஒரு முறை, மதியநேர உணவுக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடிக்கிறது. இந்த சந்திப்பின்போது, […]

உலகின் முதல் பணக்காரரான பெர்னாட் அர்னால்ட், தனது லூயி ஊட்டன் நிறுவனத்தை, தனக்குப் பிறகு தலைமை ஏற்று நடத்த, தொழில் வாரிசை தேர்வு செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதுமை பருவத்தில் இருக்கும் பெர்னாட் அர்னால்டுக்கு 5 புதல்வர்கள் உள்ளனர். லூயி ஊட்டன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், அவர் புதல்வர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மாதம் ஒரு முறை, மதியநேர உணவுக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடிக்கிறது. இந்த சந்திப்பின்போது, நிறுவனத்தின் வர்த்தக உத்திகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், இதைத் தவிர, பெர்னாட் அர்னால்டின் அடுத்த வாரிசை தேர்வு செய்யும் நடவடிக்கையின் பகுதியாக இது உள்ளது என்று பரவலாக பேசப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu