வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தின் சில இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக மற்றும் புதுச்சேரியில் 4- ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை மேற்கு திசை காற்றில் வேக மாறுபாட்டு காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. இது கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி,கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். வருகிற 7ம் தேதி இலங்கை கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.