வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம், வரும் 29-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு வங்கக் கடலுக்கு அருகில் இது உருவாகும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், மேற்கு திசையில் காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்படுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில் வரும் 1-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.