மோசடி தடுக்கும் நோக்கில், அனைத்து சமையல் எரிவாயு நுகர்வோர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டியுள்ளது. பதிவு இல்லாதவர்களுக்கு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற தகவல் பரவியுள்ளது.
மத்திய அரசு, சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) வழங்கும் முறையில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை 2024 மார்ச்சிலேயே அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைந்து பயோமெட்ரிக் பதிவு செய்யாத நுகர்வோருக்கு, சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்ற தகவல் சமூகத்தில் பரவியதால், மக்கள் அதிக அளவில் ஏஜென்சிகளை தேடி வருகின்றனர். கண்கள் மூலம் ஆதார் ஒப்புதல் செய்யும் முறை கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் முகாம் நடத்தி வருகின்றன. ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இந்த நடைமுறை மோசடிகள், தகுதியற்ற நபர்களுக்கு மானியம் செல்லாமல் தடுக்க உதவும். ஆனால் கே.ஒய்.சி. இல்லாததால் சிலிண்டர் வழங்குவதை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. தற்போது பயோமெட்ரிக் பதிவு அனைவருக்கும் கட்டாயம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.














