லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், மத்திய கிழக்கு பகுதியில் இருந்து 7000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் ஒன்றை வென்று உள்ளது.
எரிவாயு துறையில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய ஆர்டரை எல் அண்ட் டி நிறுவனம் வென்றுள்ளது. குறிப்பாக, எரிவாயு உற்பத்தி நிலையத்தில் 3 உயர் அழுத்த மின் நிலையங்களை கட்டமைப்பதில் எல் அண்ட் டி நிறுவனம் ஈடுபட உள்ளது. இந்த ஆர்டர் கிடைத்தது குறித்து எல் அண்ட் டி சேர்மன் சுப்பிரமணியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது, எல் அண்ட் டி நிறுவனம் மீதான நம்பிக்கை மற்றும் நிறுவனத்தின் வலிமை ஆகியவற்றை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.