எல் அண்ட் டி நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் 2 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையத்தை கட்டமைக்க உள்ளது. இதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வென்றுள்ளது. பங்குச் சந்தையில் இன்று சமர்ப்பித்த அறிக்கையில் எல் அண்ட் டி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியான போது, எல் அண்ட் டி நிறுவன பங்குகள் 3600 அளவில் வர்த்தகமாகின.
எல் அண்ட் டி சார்பில் மத்திய கிழக்கு நாடுகளில் அமைக்கப்படும் சூரிய மின் நிலையத்தின் மொத்த திறன் 3.5 ஜிகாவாட் ஆகும். மின் பரிமாற்றத்திற்கான கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய ஒப்பந்தத்தை எல் அண்ட் டி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரத்தில் இந்தியாவில் சூரிய மின் நிலையத்தை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எல் அண்ட் டி நிறுவனம் பெற்றது. இந்த நிலையில், மத்திய கிழக்கிலும் எல் அண்ட் டி நிறுவனத்தின் புத்தாக்க எரிசக்தி பிரிவு முக்கிய ஒப்பந்தங்களை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக நிர்வாகி மாதவதாஸ் தெரிவித்துள்ளார்.