தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வரும் எல் டி ஐ மைண்ட் ட்ரீ நிறுவனம், தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் காலாண்டு லாபம் 4% உயர்ந்து, 1151 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 14% உயர்ந்து, 8702 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 1635 கோடியாக பதிவாகியுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 9% உயர்வாகும். அதேவேளையில், எபிட்டா மார்ஜின் 19.5% ல் இருந்து 18.8% ஆக சரிவடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், நிறுவனத்திற்கு கிடைத்த ஒப்பந்தங்களின் மதிப்பு 1.41 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 17.8% ஆக சரிவடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த முந்தைய காலாண்டில், இது 20.2% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.