பிரேசில் : லூலா டா சில்வா மீண்டும் அதிபராகத் தேர்வு

October 31, 2022

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக 77 வயதுடைய லூலா டா சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று, 99 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், சில்வாவுக்கு 50.9% வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் போல்சினாரோவுக்கு 49.1% வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம், சில்வாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி ஒன்றாம் தேதி அவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அந்நாட்டின் அதிபராக பதவி […]

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக 77 வயதுடைய லூலா டா சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று, 99 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், சில்வாவுக்கு 50.9% வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபர் போல்சினாரோவுக்கு 49.1% வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம், சில்வாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி ஒன்றாம் தேதி அவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அந்நாட்டின் அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பொருட்டு சிறைவாசம் அனுபவித்தார். இதனால், மக்கள் வலதுசாரி கட்சியின் போல்சினாரோவை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர்.

போல்சினாரோ ஆட்சிக் காலத்தில், பிரேசில் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும், கொரோனா பெருந்தொற்றை திறம்பட கையாளவும் தவறியது. இதனால், பிரேசில் மக்கள் அவரது ஆட்சி மீது அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், இடதுசாரி கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர். தொடர்ந்து, அர்ஜென்டினா, கொலம்பியா, சிலி போன்ற தென் அமெரிக்க நாடுகளில் இடது சாரி கட்சிகள் ஆட்சியில் அமர்வது அதிகரித்துள்ளது. மேலும், நடந்த முடிந்த தேர்தலில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் சில்வா வெற்றியடையந்துள்ளார். வெறும் இரண்டு மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றியடைந்துள்ளது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். புதிதாக ஆட்சி அமைக்க உள்ள சில்வாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu