வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சபாரிக்கு சொகுசு ஏ.சி. பேருந்துகள்

சிங்கம், மான் சபாரிக்கு சொகுசு ஏ.சி. பேருந்துகள் அறிமுகப்படுத்த உள்ளதாக வண்டலூர் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பூங்காவில் சிங்கம் சபாரி, மான் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக […]

சிங்கம், மான் சபாரிக்கு சொகுசு ஏ.சி. பேருந்துகள் அறிமுகப்படுத்த உள்ளதாக வண்டலூர் பூங்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பூங்காவில் சிங்கம் சபாரி, மான் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்காக 2 ஏ.சி. சொகுசு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இவை இந்த மாத இறுதியில் பூங்காவுக்கு வர உள்ளது. எனவே விரைவில் வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சபாரியில் பார்வையாளர்கள் செல்லலாம். மேலும் பூங்காவுக்கு கூடுதலாக 10 பேட்டரி வாகனங்களும் வாங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu