நில அளவர், வரைவாளர்கள் 922 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 922 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நடந்த தேர்வில் நில அளவர் பணிக்கு 698 பேர், வரைவாளர் பணிக்கு 224 பேர் என மொத்தம் 922 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வருவாய்த் துறை, அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் […]

நிலஅளவர், வரைவாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 922 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நடந்த தேர்வில் நில அளவர் பணிக்கு 698 பேர், வரைவாளர் பணிக்கு 224 பேர் என மொத்தம் 922 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.வருவாய்த் துறை, அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் வருவாய்த் துறை விளங்குகிறது. இந்த துறையின் பணிகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu