அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை - அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

அமுல் நிறுவனம், தமிழகத்தின் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அமுல் நிறுவனம் தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் விற்பனை செய்து வந்தது. அதுவும், அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது, தமிழகத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில், […]

அமுல் நிறுவனம், தமிழகத்தின் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அமுல் நிறுவனம் தங்களது தயாரிப்புகளை தமிழகத்தில் விற்பனை செய்து வந்தது. அதுவும், அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது, தமிழகத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில், அமுல் நிறுவனம் பால் கொள்முதலில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமுல் நிறுவனம் பால் கொள்முதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மற்றும் பதப்படுத்தும் மையங்களை நிறுவியுள்ளது. இது, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இந்தியாவின் ‘வெண்மை புரட்சி’ கொள்கைக்கு எதிராக கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பாக உள்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu