இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மு.க ஸ்டாலின் டெல்லி பயணம்

December 16, 2023

இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெறுவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் வரும் 19ஆம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு இந்தியா கூட்டணியின் நான்காவது ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் வீட்டில் நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. […]

இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு பெறுவதற்காக முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

டெல்லியில் வரும் 19ஆம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு இந்தியா கூட்டணியின் நான்காவது ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் வீட்டில் நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி காலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டணி பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மூலம் சுமார் 28 எதிர் கட்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu