பிரான்சில் அகதிகளை தடுக்கும் புது சட்டம்

December 21, 2023

பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்தோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் சட்டம் வரவுள்ளது. பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோதமாக அகதிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் வந்து கொண்டே உள்ளனர். இதை தடுக்க இயலவில்லை. அல்ஜீரியா, துருக்கி, மொராக்கோ, போர்ச்சுகல் போன்ற பல நாடுகளில் இருந்து மக்கள் நுழைகின்றனர். இதனால் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகிறது. கட்டுக்கடங்காமல் அகதிகள் இப்படி நுழைவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் அவ்வப்போது […]

பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்தோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் சட்டம் வரவுள்ளது.

பல ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோதமாக அகதிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் வந்து கொண்டே உள்ளனர். இதை தடுக்க இயலவில்லை. அல்ஜீரியா, துருக்கி, மொராக்கோ, போர்ச்சுகல் போன்ற பல நாடுகளில் இருந்து மக்கள் நுழைகின்றனர். இதனால் பிரான்ஸ் நாட்டில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வருகிறது. கட்டுக்கடங்காமல் அகதிகள் இப்படி நுழைவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்தோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் மசோதாவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கட்சி மற்றும் எதிர்க்கட்சியும் ஒருமித்து கொண்டு வந்திருக்கின்றன.

இந்த சட்டம் இயற்றப்படுவதால் அகதிகள் வேறு குடிமக்கள் குடிமக்கள் வேறு என்ற பாகுபாடு ஏற்பட்டு நலத்திட்ட உதவிகள் சட்டபூர்வமாக குடியேறுபவர்களுக்கும் கிடைப்பது கடினமாகிவிடும். எனினும் இதுகுறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அகதிகளை தடுக்கும் கவசமாக இந்த சட்டம் அமையும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu