ஐபோன் 15 கைப்பேசி விலை - மற்ற நாடுகளை விட இந்தியாவில் உயர்வு

September 14, 2023

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 கைப்பேசிகள் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கூடுதல் விலையில் விற்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளை விட, இந்தியாவில், ஐபோன் 15 கைபேசிகள் விலை பன்மடங்கு உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் கைபேசி, அமெரிக்காவில் 1599 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 132717 ரூபாய் ஆகும். ஆனால், இதே மாடல் கைப்பேசியின் இந்திய விலை 199900 ஆக சொல்லப்பட்டுள்ளது. இது 51% உயர்வாகும். […]

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 கைப்பேசிகள் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கூடுதல் விலையில் விற்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளை விட, இந்தியாவில், ஐபோன் 15 கைபேசிகள் விலை பன்மடங்கு உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் கைபேசி, அமெரிக்காவில் 1599 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 132717 ரூபாய் ஆகும். ஆனால், இதே மாடல் கைப்பேசியின் இந்திய விலை 199900 ஆக சொல்லப்பட்டுள்ளது. இது 51% உயர்வாகும். ஆனால், இந்த கைபேசி மாடல் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை என்பதால், இந்த விலை உயர்வு ஏற்றுக்கொள்ளத்தக்கது என பேசப்படுகிறது. இதுவே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் மாடல்களும், அமெரிக்க விலையை விட 20% கூடுதலாக உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. துபாயில் தயாரிக்கப்படாவிட்டாலும், ஐபோன் 15 கைபேசி விலை, இந்திய மதிப்பில் 76817 ரூபாய்க்கு அங்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் கூடுதல் விலையில் விற்கப்பட உள்ளது. இந்தியாவில் ஐபோன் மாடல் கைபேசிகளுக்கான வரவேற்பு குறைவு என்பதாலும், 22% இறக்குமதி வரி உள்ளதாலும், இவ்வாறு நிகழ்வதாக கூறப்படுகிறது. இவை தவிர, இந்த விலை உயர்வுக்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu