நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கப் பணிக்காக கடந்த வாரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கடலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் அழிக்கப்பட்டன. இதன் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் போராட்டங்கள் அதிகரித்தன. பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறை தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த விவகாரத்தில், நாசம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40000 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் இந்த தொகையை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முருகன், சாகுபடிக்காக பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்களை அழிப்பதற்கு தடை கோரி இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். மேலும், அறுவடை வரையில் சுரங்க விரிவாக்கப் பணிகளை தடை செய்ய உத்தரவிட வேண்டி கோரி இருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், "நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதியில், ஏற்கனவே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. எனவே, தற்போதைய நிலையில், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. எஞ்சியவர்களுக்கு இழப்பீடு கிடையாது. ஆனால், அறுபடை காலம் வரையில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது" என உறுதி அளித்துள்ளது.