மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு ஜாக் டிராபர் முன்னேறி உள்ளார்.
ஸ்பெயினின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி மற்றும் பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் மோதினார்கள். இந்த போட்டியில் அரிதாக ஆடிய டிராபர் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில், பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர், நார்வே வீரர் காஸ்பர் ரூட் உடன் மோதவிருக்கின்றார்.