மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,900 கோடி மத்திய பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மருத்துவ நலத்திட்டங்களின் நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பிரவின் பாரதி பவார், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார், தேசிய நலக்குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோருடன் நேற்று மாமல்லபுரம் ரேடிசன் புளூ விடுதியில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் 46, 988 காசநோயாளிகள் உள்ளனர். 35,382 பேருக்கு அதற்கான சிகிச்சை தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இங்கு இணைய வழி மருத்துவ ஆலோசனை திட்டம் சிறப்பாக நடக்கிறது. மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் மத்திய பட்ஜெட்டில் 1,900 கோடி ரூபாய் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.