ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்

March 11, 2023

ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது காலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை மட்டுமே செயல்படும். இந்த நிலையத்திற்கு தினமும் 15 விமானங்கள் வந்து செல்கின்றன. அதன்பின் விமான நிலையம் மூடப்பட்டு விடும். பகலில் மட்டுமே செயல்படுவதால் இலங்கை, துபாய், சிங்கப்பூர் தவிர பிற நாட்டு விமானங்கள் வருவதில்லை. மதுரை விமான […]

ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது காலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை மட்டுமே செயல்படும். இந்த நிலையத்திற்கு தினமும் 15 விமானங்கள் வந்து செல்கின்றன. அதன்பின் விமான நிலையம் மூடப்பட்டு விடும். பகலில் மட்டுமே செயல்படுவதால் இலங்கை, துபாய், சிங்கப்பூர் தவிர பிற நாட்டு விமானங்கள் வருவதில்லை.

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தரம் உயர்த்தப்படும் என லோக்சபாவில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 1 முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரவிலும் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu