தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு மூன்றாமிடம்

October 3, 2022

மத்திய அரசின் துாய்மை கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ், துாய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துாய்மை நகரங்களின் பட்டியல் தேர்வு செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் நகரத்தின் நீர்நிலைகள், பொது கழிவறைகள், ரோடு, மார்க்கெட், குடியிருப்பு பகுதி என துாய்மையின் தன்மை குறித்து www.sbmurban.org என்ற மத்திய அரசின் இணையதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை […]

மத்திய அரசின் துாய்மை கணக்கெடுப்பு திட்டத்தின் கீழ், துாய்மையான நகரங்களின் பட்டியலில் மதுரைக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துாய்மை நகரங்களின் பட்டியல் தேர்வு செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் நகரத்தின் நீர்நிலைகள், பொது கழிவறைகள், ரோடு, மார்க்கெட், குடியிருப்பு பகுதி என துாய்மையின் தன்மை குறித்து www.sbmurban.org என்ற மத்திய அரசின் இணையதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் மாநில அளவில் கோவை முதலிடம், சென்னை 2வது, மதுரைக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. தேசிய அளவில் கோவை 42, சென்னை 44, மதுரை 45ம் இடம் பெற்றுள்ளன. மதுரை மார்க்கெட் பகுதிகளின் துாய்மைக்கு 90 சதவீதம் மேல், பொது கழிவறை துாய்மைக்கு 25 சதவீதம் கீழ் ஓட்டளித்துள்ளனர்.

மாட்டுத்தாவணி பழ, காய்கறி மார்க்கெட், முக்கிய தெருவில் குப்பை தொட்டிகள், கிருதுமால், பெரியாறு, சாத்தையாறு பாசன கால்வாய், மழைநீர் வாய்க்கால் என பல பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் துாய்மை நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu