கடந்த 17ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலா ரயில் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்தது. இதில் பயணிகள் அனைவரும் தரிசனத்தை முடித்துவிட்டு மதுரைக்கு திரும்பி உள்ளனர். இந்த ரயில் மதுரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை போடி லயன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் பயணிகள் சமையல் செய்ய முற்பட்டனர். அங்கு திடீரென சிலிண்டர் வெடித்து ரயில் பெட்டியில் மள மளவென தீப்பிடித்து எறிந்தது.
ரயிலில் சிறப்பு முன் பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். அதில் 60க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்பித்தனர். இந்த திடீர் தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் பத்து லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.