மதுரை உலகத் தமிழ்ச்சங்க நூலகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை

September 21, 2022

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நுாலகம் அமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலுார் வழக்கறிஞர் ஸ்டாலின் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரையில் தமிழக அரசால் ரூ.37.25 கோடியில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டப்பட்டு 2016ல் பயன்பாட்டிற்கு வந்தது. அங்கு தற்போது தமிழை வளர்க்க போதிய புத்தகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழறிஞர்கள் ஏமாற்றமடைகின்றனர். பண்டைய தமிழ் இலக்கணம், இலக்கிய புத்தகங்கள், , […]

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நுாலகம் அமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலுார் வழக்கறிஞர் ஸ்டாலின் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரையில் தமிழக அரசால் ரூ.37.25 கோடியில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டப்பட்டு 2016ல் பயன்பாட்டிற்கு வந்தது. அங்கு தற்போது தமிழை வளர்க்க போதிய புத்தகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழறிஞர்கள் ஏமாற்றமடைகின்றனர்.

பண்டைய தமிழ் இலக்கணம், இலக்கிய புத்தகங்கள், , தொல்லியல் ஆய்வறிக்கைகள்,இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் பங்களிப்பு வரலாற்று புத்தகங்கள், சைவ, சமண, வைணவ இலக்கியங்கள் மற்றும் தமிழ் ஆராய்ச்சி அறிக்கைகளை மக்கள் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும். போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்ய உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குனர் அன்புச்செழியன் கூறுகையில், புலம் பெயர்ந்த தமிழர்கள் 60 நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களை ஒரே வலைப்பின்னலின் கீழ் கொண்டு வருவதே உலகத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம். வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் அடங்கிய புத்தகப் பூங்கா ரூ.26 லட்சத்தில் அமைக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

ரூ.6 கோடியில் நுாலகம் அமைக்கப்படும் என 2017-18 சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியானது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றார். மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதால் வழக்கை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu